Saturday, March 6, 2010

அமெரிக்க ஐக்கிய நாடு வாழ்க்கை

இந்த வருடம் ஜனவரி மாதம் பதினைந்தாம் நாள், நான் நியூ யார்க் நகரம் JFK விமான நிலையம் வந்திறங்கிய நாள் இன்றும் நினைவில் உள்ளது. அதற்கு முந்தைய தினம் தான் நான் எனது ஆருயிர் குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிவிட்டு இரவு பெங்களூர் விமான நிலையம் வந்து மும்பை விமானத்தை பிடித்து..அப்பப்பா ஒரே அலைச்சலும் பரபரப்புமான சூழல்.

இங்கு வந்த பிறகு, பாதுகாப்பு ஆய்வெல்லாம் முடிந்த பிறகு ஒரு வழியாக எனது அலுவலக குழு அன்பரால் காரில் Armonk நகரம் வந்து சேர்ந்தேன். ஒரு வாரம் ஹோடெலில்


இருந்து..அப்புறம் நண்பர்கள் உதவியால் வீடு பார்த்து..குடி வந்து..கடும் குளிர் அனுபவித்து..நியூ யார்க் நகரில் எனது சகோதரனை சந்தித்து மகிழ்ச்சி கொண்டு,நகரை சுற்றி பார்த்து, கோயில்கள் சென்று வழிப்பட்டு
..இன்று நிதானமாக வலைப்பக்கத்தை எழுதும் அளவிற்கு தயாராகிவிட்டேன் :-)

குடும்பத்தை பிரிந்து வருவது எவ்வளவு சிரமம், மனதழுத்தம், பிரிவின் தாக்கம் எல்லாம் மற்றவர் சொல்லி மட்டும் கேட்டிருக்கிறேன். இப்போது அனுபவிக்கும்பொழுது 

தெரிகிறது. மனைவி என்பவர் எவ்வளவு இனிய நண்பர்..கூட இருக்கும்போது இதை நாம் சாதாரனமாக அல்லவா எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அது எவ்வளவு இனிமையான உறவு, நட்பு என்பதை இப்பொழுது நன்றாக உணர்கிறேன். விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளால் - Skype
மற்றும் கூகிள் டாக் உதவியால் நானும் எனது இல்லாளும் பேசுகிறோம், அன்பைப்பரிமாருகிறோம்.
விஞ்ஞானத்துக்கும், IT க்கும் கோடி நன்றிகள்.

இங்கு மக்கள் ஒரு விதமான இயந்திர வாழ்க்கை வாழுகிறார்கள். அவசரம், பொருளாதார கவலை , பொறுப்புகள் எல்லாமாய் சேர்ந்து வாட்டுகிறது. ஆனால் முன்னேற்றம் மற்றும் இந்த சோகமான சூழலில் இருந்து மீள வேண்டும் என்ற முனைப்பும் பிரமிக்க வைக்கிறது. இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. உதாரணமாக டிராபிக் நேர்த்தி, காரோட்டுதல், வயதானவர்களை, குழந்தைகளை, ஊனமுற்றோரை நடத்தும் பாங்கு, விதிகளை அனுசரிக்கும் ஒழுங்கு, பிற நாட்டு மக்களிடம் நேயம்.. எல்லாமும். இந்தியாவில் நம்மை விட ஏழ்மையான மாநிலத்திலோ, பிற நாட்டிலிருந்தோ (பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீ லங்கா, பூட்டான், பீகார், உத்தர் பிரதேஷ்..) வரும் மக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை பார்க்கும் பொழுது
நாம் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளது. அதே போல் நாமும் நமது கலாச்சாரத்தை பற்றி எடுத்துசொல்லவும், பரிமாறிக்கொள்ளவும் இங்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

ஆகையால் வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் இந்த அனுபவங்களை கடவுளின் பாடமாகவே எடுத்துக்கொள்கிறேன். அனால் சீக்கிரம் எனதன்பு மனைவியும் என்னுடம் இங்கு ற்கு அருள் புரிவாயாக இறைவியே. கோடி நன்றி உனக்கு !!


No comments: